Wednesday, 15 June 2011

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள்

நேற்று முதல் அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து செயல்பட ஆரம்பித்து விட்டன. பாடப்புத்தகங்கள் பள்ளிகளிலேயே வழங்கப்பட்டு விடும். ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடத்திட்டங்களில் தெளிவான முடிவு இன்னும் எட்டப்படாத நிலையில் வகுப்புகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் ஓரிரு வாரங்களுக்குள் வாங்கிவிட வேண்டும்.

கடந்த வருடம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சில தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளிகளிலும், பொதுவான செய்தித்தாள் விளம்பரம் மூலமாகவும் பொருளாதாரத்தில் பிந்தங்கிய, தாய்/தந்தையை இழந்த கிட்டத்தட்ட 200 மாணவ மாணவிகள் இளைஞர் சக்தி இயக்கம் என்ற தன்னார்வ சேவை அமைப்பு மூலம் இலவசமாக நோட்டுப் புத்தகங்கள் பெற்று பயனடைந்தார்கள். இதில் நாங்கள் தன்னார்வலர்களாக எங்களை இணைத்துக் கொண்டு மாணவர்களை ஒருங்கிணத்தோம்.

இந்த வருடமும் நாங்கள் பசுமை உலகம் மற்றும் இளைஞர் சக்தி இயக்கம் அமப்புகளின் இலவச நோட்டுப் புத்தகத் திட்டத்திற்காக தன்னார்வலர்களாக ஒருங்கிணைப்பு மற்றும் களப்பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

Happy Birthday Minmini Blog!

It gives us a great pleasure to publish our first post on our blog. Our company website is getting ready to launch now. Here we intend to blog our news, updates, life-style and some interesting things. Have a fun!

Regards,
Minmini Team