Tuesday, 6 May 2014

டொமைன் பதிவு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படைத் தகவல்கள்

இணையத்தில் நமக்கென்று ஒரு வெப்சைட் (Website) உருவாக்கும் போது முதல் தேவை நமக்கான தனிப்பட்ட இணைய முகவரியை (Domain Name) பதிவு செய்தல்.

இணைய முகவரி (Domain Name) பற்றிய அறிமுகம் இங்கே

அப்படி பதிவு செய்யும் போது சில முக்கியமான விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. நமது பெயரில் பதிவு செய்ய வேண்டும்

அதாவது நாம்தான் நம்முடைய இணைய தளத்திற்கு சொந்தக்காரராக பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கு நம் இமெயில் முகவரி, போன் நெம்பர் மற்றும் நம் பெயரோடு கூடிய அலுவக முகவரி அல்லது வீட்டு முகவரி இவையெல்லாம் கொடுக்கப்பட வேண்டும்.

இது பின்னாளில் நம் அனுமதியின்றி நம்முடைய இணைய முகவரி வேறொருவருக்கு மாற்றம் செய்யப்படாமல் பாதுகாத்துக் கொள்ளவும், ஆண்டுக்கு ஆண்டு புதுப்பித்துக் (Renewal) கொள்வதற்கான நினைவுறுத்தல் (Reminder) இமெயில்களைப் பெற்று உரிய நேரத்தில் மீண்டும் புதிப்பித்து நம் முகவரியை இழக்காமலிருக்கவும் உதவும்.

சமீபத்திய குறிப்பு:இணைய முகவரி (Domain Name) உங்கள் பெயரில் பதிவு செய்யும் போது, உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு (Registrant Email) பதிவுச் சேவை வழங்கும் நிறுவனத்திடமிருந்து (Registration Service Provider) இணைய முகவரிக்கான உரிமையாளர் ஒப்புதல் இமெயில் (Domain Ownership Verification Email) உங்களுக்கு வந்து சேரும். நீங்கள் உங்கள் இமெயில் முகவரியிலிருந்து சம்பந்தப்பட்ட HyperLink-ஐ சொடுக்கியவுடன் உங்களது உரிமையாளர் இமெயில் உறுதிசெய்யப்பட்டு விடும். இதை நீங்கள் இணையதள முகவரி (Domain) பதிவு செய்யபட்ட சில நாட்களுக்குள் செய்தாக வேண்டும். தவறினால் உங்கள் இணைய முகவரி தானாகவே முடக்கப்பட்டு (Suspend) விடும். மீண்டும் நீங்கள் உங்கள் இணையதள பதிவுச் சேவை வழங்கும் நிறுவனத்திடம் வேண்டுகோள் வைத்தால் அவர்கள் மீண்டும் உங்களுக்கு ஒப்புதல் இமெயிலை (Domain Verification Email) அனுப்பி வைப்பார்கள்.

மேலும் நீங்கள் உங்கள் இணையதளத்தின் வாயிலாக உங்கள் பொருட்களை விற்பனை (ECommerce Website)  செய்கையில் பணப் பரிவர்த்தனை (Payment Processing) தேவைப்படும். அப்போது உங்கள் தொழில் முகவரி, வங்கிக் கணக்கோடு உங்கள் இணையதள உரிமையாளர் பெயர் மற்றும் முகவரியும் ஒத்துப் போகிறதா என்று சரிபார்த்த பின்னரே உங்கள் இணையதளத்திற்கான பணப்பரிவர்த்தனையை (Payment Gateway) சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெற முடியும். மேலும் இப்படி பல விதங்களில் இது முக்கியம்.

2. ஒரு இணையதளத்திற்கு உரிமையாளரை எப்படி தெரிந்து கொள்வது?

உங்கள் இணையதளத்திற்கு யார் சொந்தக்காரர், யாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது, எவ்வளவு காலம் இணையத்தில் பயன்பாட்டில் இருந்து வருகிறது போன்ற பல தகவல்களை நீங்களே http://who.is, http://domaintools.com போன்ற தளங்களில் உங்கள் Domain Name'ஐ உள்ளிட்டு அறிந்து கொள்ளலாம்.


Who is look-up data

இதில் "Registrar" என்பது .com, .in, போன்ற Top Level Domain-களை பதிவு செய்து கொடுக்க அங்கீகாரம் பெற்ற முதன்மை பதிவு நிறுவனம் ஆகும்.

"Registrant" என்பது Domain உரிமையாளர் மற்றும் அவர் சார்ந்த தகவல்கள். இங்கு தான் நம்முடைய விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.


சில இணையதளங்களுக்கு இந்த தகவலானது பொதுவில் (Public View) வைக்கப்படாமல் அந்தரங்கமாகப் (Privacy) பேணப்படும். இதை சம்பந்தப்பட்ட பதிவு செய்து தரும் நிறுவனங்கள் (ரெஜிஸ்டர்கள்-Domain Registers) சிலசமயம் இலவசமாகவும், சில கட்டணச் சேவையாகவும் வழங்கி வருகின்றன. 
ஒரு வேளை உங்கள் பெயரில் உங்கள் இணையதளம் இல்லையெனில் உங்களுக்கு பதிவு செய்து கொடுத்த நிறுவனத்தையோ நபரையோ அணுகி மாற்றம் செய்து கொள்வது அவசியமாகும். தேவைப்பட்டால், Domain Control Panel-க்கான உங்கள் பயனாளர் கணக்குத் தகவல்களையும் (username & password) பெற்றுக் கொள்வது இன்னும் சாலச் சிறந்ததாகும்.

"Domain Status" என்பது உங்கள் இணையதளம் எவ்வாறு பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும்.

உதாரணத்திற்கு: Domain Status: clientTransferProhibited OR Registrar lock
என்று இருந்தால் உரிமையாளர் அனுமதியின்றி வேறு ஒருவருக்கு மாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம். இது முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

மின்மினி வெப் சர்வீசஸ் மூலம் பதிவு செய்யப்படும் இணையதளங்கள் (Domains) உங்கள் பெயரிலேயே (இமெயில், போன், முகவரி) பதிவு செய்யப்படும். மேலும் இணையதளம் பயன்பாட்டில் இருக்கும் காலத்தில் உங்கள் அனுமதியின்றி வேறு எங்கும் மாற்றம் (Transfer) செய்யப்படாமலிருக்க Domain Lock செய்து வைப்பதை வழக்கத்தில் வைத்திருக்கிறோம். நீங்கள் விரும்பினால் தேவைப்படும் நேரத்தில் இதை UnLock செய்து கொள்ளலாம்.

3. இணைய முகவரியை (Domain Name) எங்கு பதிவு செய்வது?

உங்கள் டொமைன் பதிவு செய்யம் வசதியை இணையத்தில் ஏராளமான நிறுவனங்கள் தருகின்றன. BigRock.in, GoDaddy.Com போன்ற பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சலுகை விலையில் தருகின்றன. ஒரு வருடத்திற்கோ அல்லது சேர்ந்தாற் போல பல வருடங்களுக்கோ உங்கள் இணையதள முகவரியை பதிவு செய்யும் போது உங்களுக்கு கணிசமான பணம் மிச்சப்படும். மேலும் வெப் ஹோஸ்டிங் (Web Hosting) அவர்களிடமே பெறும் போது அதற்கும் சலுகை கொடுக்கிறார்கள். ஆனால் நீங்கள் உங்கள் அருகிலுள்ள ஒரு வெப் ஹோஸ்டிங் (Web Hosting) அல்லது வெப் டிசைனிங் (Web Designing) கம்பெனியிடமிருந்தே Domain Name-ஐயும் பெறுவது நல்லதாகும். ஏனெனில் டொமைன் மற்றும் ஹோஸ்டிங்’க்காக தனித் தனியே புதுப்பித்தல், Control Panel பராமரிப்பு, வெப் டிசைனருக்கான தனியான தேடல் போன்ற சிரமம் தேவையில்லை. நீங்கள் எங்கு பதிவு செய்தாலும் மேற்சொன்ன விசயங்களை கவனத்தில் கொண்டு பதிவு செய்து கொள்வதே போதுமானது.

மேலும் மின்மினி வெப் சர்வீசஸ்-ல் இணையதள முகவரி (Domain), வெப் ஹோஸ்டிங் (Hosting) இவற்றோடு சேர்த்து இமெயில்(Email), வெப்சைட் உருவாக்கம் (Website Development) மற்றும் பராமரிப்பு (Maintenance), சமூக வலைதள ஒருங்கிணைப்பு (Social Media Optimization) என ஒரு முழுமையான இணையதளத்துக்குத் தேவையான அனைத்து விசயங்களையும் ஒருங்கே தருகிறோம். மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள் வேறு பக்கம் Domain மற்றும் Hosting பதிவு செய்திருந்தாலும் அதை எங்களிடம் மாற்றிக் கொள்ள வலியுறுத்துகிறோம். ஏனெனில் பல சமயங்களில் பல் வேறு தொழில்நுட்ப உதவிகள்/வேறுபாடுகள், தகவல் பரிமாற்ற (Communication) இடைவெளிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும், மேம்பட்ட தரமான சேவையை வழங்கவும் ஏதுவாக நாங்கள் இதை கடைப்பிடிக்கிறோம். இது எங்கள் வாடிக்கையாளருக்கும் ஒரே இடத்தில் இணையதளம் தொடர்பான எல்லாத்தையும் நிறைவாகப் பெற பெரிதும் உதவும் என நம்புகிறோம்.


Thursday, 1 May 2014

Domain Registration Promos for May 2014

May 2014 Promo May 2014 Promo May 2014 Promo
May 2014 Promo May 2014 Promo
These Promos are applicable for 1 year domain registration only. 
Also valid from 1st May 2014 to 30th May 2014.

.in domain - Rs.540 ( Rs.300 ) Promo Code: in0514
.com domain - Rs.740 ( Rs.550 ) Promo Code: com0514
.org domain - Rs.780 ( Rs.400 ) Promo Code: org0514
.biz domain - Rs.800 ( Rs.400 ) Promo Code: biz0514
.net domain - Rs.740 ( Rs.400 ) Promo Code: net0514

To place your orders visit Order Form