Monday, 18 August 2014

GMAIL-ல் தேவையற்ற இமெயில்களை ஒரே கிளிக்கில் unsubscribe செய்ய

உங்கள் GMAIL - Inbox-ல் உள்ள தேவையற்ற இமெயில்களை ஒரே கிளிக்கில் inbox-ஐ விட்டு வெளியேறாமலேயே unsubscribe செய்ய எளிமையான வழியை Google அறிமுகம் செய்துள்ளனர்.

அதாவது, GMAIL-லில் உங்கள் inbox-க்கு உங்களுக்கு சம்பந்தமில்லாத அல்லது விருப்பமில்லாத வகையில் வந்து குவியும் இமெயில் ஒவ்வொன்றிலும் unsubscribe- செய்யும் இணைப்பைத் தேடிக் கண்டுபிடித்து, அது இழுத்துச் செல்லும் இணையப்பக்கத்துப் போய் அங்கே ”உறுதியாகவா? ஏன், எதனால் unsubscribe-செய்கிறீர்கள்” என்ற வழ வழ கேள்விகளுக்கு எல்லாம் பதில் கொடுக்காமலேயே GMAIL-லில் இருந்த படியே unsubscribe பண்ண முடியும்.
Step-1
Step-2

இந்த unsubscribe- பட்டனை கிளிக் செய்வதால் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட இமெயிலிருந்து (sender) வரும் மெயில்கள் அனைத்தும் spam folder-ல் தள்ளப்பட்டுவிடும். 30 நாட்கள் கழித்து இந்த spam folder-லிருந்து முழுமையாக அழிந்து விடும். இந்த கால இடைவெளியில் நாம் அவ்வப்போது spam folder-ஐயும் check பண்ணிக் கொள்வது தேவையான மெயில்களை தவறவிடாமலிருக்க உதவும். ஒரு வேளை தேவையான மெயில் என்றால் inbox-க்கு மாற்றிக் கொள்ளலாம், மேலும் தகுந்த label-ஐ போட்டு வைக்கலாம்.